காதில் ஹெட்போன் மாட்டிய படி தூங்கிய பெண் மின்சாரம் தாக்கி மரணம்

சென்னையில் செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்ட படி தூங்கிய பெண் மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #chennaiwomen #electrocuted
காதில் ஹெட்போன் மாட்டிய படி தூங்கிய பெண் மின்சாரம் தாக்கி மரணம்
Published on

சென்னையின் கணத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா(45). இவர் கடந்த சனிக்கிழமை இரவு தூங்கும் போது செல்போனில் பாட்டுக்கொண்டிருந்தார். ஹெட்போனை காதிலிருந்து அகற்றாமலேயே தூங்கி விட்டார். ஞாயிற்றுக்கிழமை காலை பாத்திமாவின் கணவர் அப்துல் கலாம் அவரை எழுப்பியுள்ளார். ஆனால் பாத்திமா விழிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்துல் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பாத்திமாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் பாத்திமாவின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். அவரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com