தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் குடகு விடுதியில் தமிழக போலீஸ் அதிகாரிகள் விசாரணை

கர்நாடக மாநிலம் குடகில் உள்ள தனியர் விடுதியில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் விடுதியில் தமிழக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் குடகு விடுதியில் தமிழக போலீஸ் அதிகாரிகள் விசாரணை
Published on

சென்னை:

தமிழகத்தில் ஆளுங்கட்சியில் உள்ள உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்ததை ரத்து செய்வது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக அரசியலில் இந்த விவகாரம் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதலமைச்சருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள சொகுசு விடுதியில் தமிழக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கோவை பதிவெண் கொண்ட வாகனங்களில் சென்ற தமிழக போலீஸ் அதிகாரிகள் சுமார் 20 பேர் இந்த விசாரணையை தொடங்கி உள்ளனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சுய விருப்பத்தின்பேரில் தங்கியிருக்கிறார்களா? கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களா? என விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com