மிலாதுநபி திருநாள் : தமிழக கவர்னர் வாழ்த்து

சமுதாயத்தில் நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும் என மிலாதுநபியையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்
Published on

சென்னை:

மிலாதுநபியையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

முகமதுநபியின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் மிலாதுநபி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான மற்றும் புனிதமான நாளில், முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒழுக்கம், இரக்கம், உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் தொண்டு போன்ற உயர்ந்த மனிதநேயமிக்க பண்புகளை கடைபிடித்து வாழ்ந்தவர் முகமதுநபி. மனிதகுலத்திற்கு நீதி மற்றும் நல்லொழுக்கத்தின் பாதையை காட்டியவர். அனைவருக்கும் இரக்கத்தையும் கருணையையும் போதித்தார். முகமது நபியின் கொள்கைகளால் நம் வாழ்க்கை ஒளிரட்டும்.

இந்த நாள், சமுதாயத்தில் நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். இந்த நன்னாளில் சமூகத்தில் அன்பு, அமைதியை வளர்ப்பதற்கு அனைவரும் பாடுபடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com