கூவத்தூர் விவகாரம்: தமிழக அரசை உடனடியாக கலைக்க வேண்டும்- ஜெ.தீபா

கூவத்தூரில் பணபேரம் நடைபெற்றது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசை கலைக்க வேண்டும் எனவும் ஜெ.தீபா அறிக்கை விடுத்துள்ளார்.
கூவத்தூர் விவகாரம்: தமிழக அரசை உடனடியாக கலைக்க வேண்டும்- ஜெ.தீபா
Published on

சென்னை:

அ.தி.மு.க. ஜெ.தீபா அணி பொதுச்செயலாளர் ஜெ.தீபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விமான நிலையத்தில் ரூ.2 கோடி, கூவத்தூரில் ரூ.4 கோடி, ஆளுநர் மாளிகைக்கு செல்லும்போது ரூ.6 கோடி என சசிகலா அணி தங்களிடம் பேரம் பேசியதாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கூறுவது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அமலாக்கத்துறை, வருமான வரித்துறையும் உடனடியாக விசாரணை களத்தில் இறங்க வேண்டும். ஊழல் கரை படிந்தவர்களை ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் தூக்கி எறிய வேண்டும் என்று வாஞ்சையோடு அழைக்கிறேன்.

ஜனநாயக மாண்பை சீர்குலைக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. லஞ்சம் பெற்ற எம்.எல்.ஏ.க்களையும், சசிகலா பினாமி அரசையும் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஜெ.தீபா கூறியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com