ராஜபாளையம் த.மா.கா. நிர்வாகிகள் காங்கிரசில் இணைந்தனர்

ராஜபாளையம் த.மா.கா. நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தனர்.
ராஜபாளையம் த.மா.கா. நிர்வாகிகள் காங்கிரசில் இணைந்தனர்
Published on

ராஜபாளையம்:

த.மா.கா. ராஜபாளையம் நகரத்தலைவர் பீமராஜா, வட்டாரத்தலைவர் வழக்கறிஞர் ராஜேந்திரன், இளைஞர் அணித்தலைவர் சங்கர்கணேஷ் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத் தலைவர் நாராயணன், வட்டாரத் தலைவர் முருகேசன் ஆகியோரது தலைமையில் 200-க்கும் மேற்பட்ட த.மா.கா. நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தளவாய்பாண்டியன் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

த.மா.கா.வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த அனைவரும் விருது நகர் மேற்கு மாவட்ட காங் கிரஸ் தலைவர் தளவாய் பாண்டியன் தலைமையில் அகில இந்திய பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான மாணிக்கம் தாகூரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் அய்யனார், ராதா கிருஷ்ணன், நகரத்தலைவர் ராதாகிருஷ்ணராஜா, எஸ்சி.எஸ்டி.பிரிவு ராமர், வட்டாரத்தலைவர் ரெங்கசாமி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நல்லதம்பி, நகரநிர்வாகி மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com