சுவாமிமலை அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

சுவாமிமலை அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதிரி படம்
மாதிரி படம்
Published on

சுவாமிமலை:

சுவாமிமலை அருகே உள்ள ஏராகரம் மேலத் தெருவில் வசிப்பவர் விஸ்வநாதன் மகன் கண்ணன் (வயது 37). விவசாய கூலி தொழிலாளி.

இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் மகன் விக்னேஷ் (23), கேசவன் மகன் குட்டி என்கின்ற சுதாகர் (20), ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று கண்ணன் ஏரகரம் குளத்துக்கரையில் நடந்து சென்றபோது விக்னேசும், சுதாகரும், கண்ணனிடம் தகராறு செய்து அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கண்ணன் சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், சுதாகர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com