ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானில் ஹக்கானி இயக்கத்தினர் 4 பேர் கொலை: அமெரிக்காவின் செயலா?

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் ஹக்கானி தீவிரவாத இயக்கத்தினர் மீது ஆளில்லாத ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான வீடு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்
தாக்குதலுக்கு உள்ளான வீடு அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஹக்கானி இயக்கமானது ஆப்கானிஸ்தானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்த இயக்கத்திற்கு பாகிஸ்தான் மறைமுக ஆதரவை அளிப்பதாக அமெரிக்க, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றது.

இந்நிலையில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஹக்கானி இயக்கத்தின் தளபதி அப்துல் ரஷீத் ஹக்கானி வீட்டை குறிவைத்து ஆளில்லாத ட்ரோன்கள் ஏவுகனைகளை வீசியது. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அப்துல் ரஷீத் ஹக்கானி நிலை குறித்து தெரியவில்லை.

இந்த ட்ரோன் தாக்குதல் அமெரிக்காவின் செயலாக இருக்கலாம் என்று பாகிஸ்தான் உளவுத்துறை கூறியுள்ளது. அப்படி இருக்குமானால், ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் நான்காவது ட்ரோன் தாக்குதலாக இது இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com