தென் ஆப்பிரிக்காவில் வேட்டைக்காரரை கொன்று தின்ற சிங்கங்கள்

தென் ஆப்பிரிக்காவில் லிம்போயோ மாகாணத்தில் குரூஜெர் தேசிய பூங்காவில் வேட்டைக்காரர் ஒருவரை சிங்கங்கள் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் வேட்டைக்காரரை கொன்று தின்ற சிங்கங்கள்
Published on

கேப்டவுன்:

தென் ஆப்பிரிக்காவில் லிம்போயோ மாகாணத்தில் ஹோயட்ஸ் புருயிட் அருகே குரூஜெர் தேசிய பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான சிங்கங்கள் உள்ளன. அங்கு அவை சட்ட விரோதமாக வேட்டையாடப்படுகின்றன.

இந்த நிலையில் அங்கு ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலின் பெரும்பகுதியை ஏதோ ஒரு விலங்கு தின்ற பின் தலை உள்ளிட்ட சில பாகங்கள் மட்டும் அங்கு இருந்தன.

அவரது உடல் அருகே வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் வெடி பொருட்கள் இருந்தன. எனவே அவர் வேட்டைக்காரராக இருக்கலாம். வேட்டையாடும்போது சிங்கம் அவரை அடித்து கொன்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிங்கத்தின் எலும்புகள் பாரம்பரியமிக்க மருந்துக்காக பயன்படுத்தப்படுகிறது. அதற்காக அவை வேட்டையாடப்படுகின்றன. கடந்த 2013-ம் ஆண்டில் லிம்போவில் 3 ஆண் சிங்கங்கள் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com