பனாமா லீக்ஸ்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

பனாமா லீக்ஸ் விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பனாமா லீக்ஸ்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
Published on

புதுடெல்லி:

மத்திய அமெரிக்காவில் உள்ள பனாமா நாடு கேளிக்கைக்கு புகழ் பெற்றதாகும். சுவிச்சர்லாந்து மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு அடுத்தபடியாக பணத்தை பதுக்கி வைக்கும் சொர்க்கபுரியாக இந்நாடு உள்ளது. அங்குள்ள மொசாக் பொன்செக்கா என்ற சட்ட நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் 35 நாடுகளில் கிளைகள் உள்ளன.

பெரும் தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் மொசாக் பொன்செக்கா நிறுவன உதவியுடன் ஒரு நிறுவனத்தை தொடங்கி பனாமா வங்கியில் கணக்குகளை தொடங்கியுள்ளனர். அந்த நிறுவனம் பெயரளவில் இருந்தால் போதும். செயல்பட வேண்டிய அவசியமில்லை. அவரவர் தொடங்கும் நிறுவனங்களின் பெயரில் வங்கி களில் கோடிக்கணக்கில் பணம் போடப்பட்டு வரிஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மொசாக் பொன்செக்கா நிறுவனம் பராமரித்து வந்த ரகசிய ஆவணங்களை ஜெர்மனியை சேர்ந்த நாளிதழ் கடந்தாண்டு வெளியிட்டது.

‘பனாமா லீக்ஸ்’ என்றழைக்கப்படும் இந்த ரகசிய ஆவண தகவல் கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள் ளது. சுமார் 12 நாடுகளின் இந்நாள், முன்னாள் அரசியல் தலைவர்களின் பெயர்கள் பனாமா லீக்ஸ் பட்டியலில் இடம்பெற்றன.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் இந்த விவகாரத்தால் தனது பதவியை இழந்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த நடைகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என  எஸ். எல். ஷர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இம்மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com