சுங்குவார்சத்திரம் அருகே பயணிகள் கூட்டத்துக்குள் லாரி புகுந்து கவிழ்ந்தது - 3 பேர் காயம்

சுங்குவார்சத்திரம் அருகே பயணிகள் கூட்டத்துக்குள் லாரி புகுந்து கவிழ்ந்ததில் தாய் மற்றும் மகள் உள்பட 3 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
சுங்குவார்சத்திரம் அருகே பயணிகள் கூட்டத்துக்குள் லாரி புகுந்து கவிழ்ந்தது - 3 பேர் காயம்
Published on

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஷேர் ஆடடோவுக்காக ஏராளமானோர் காத்து நின்றனர். அப்போது சென்னையில் இருந்து வேலூரை நோக்கி ஊர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி வேகமாக சென்றது.

சாலையின் குறுக்கே சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க லாரிய டிரைவர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நிலை தடுமாறி சாலை ஓரத்தில் நின்ற பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிங்காடிவாக்கம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி செண்பகவள்ளி (45), இவரது மகள் கனிமொழி (20), லாரி டிரைவர் அரவிந்தன் (23) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை சுங்குவார்சந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் மீட்டு சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

X

Maalai Malar
www.maalaimalar.com