சிரியா: தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி

சிரியாவின் இத்லிப் நகரத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய கோர தாக்குதலில் 12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியா: தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி
Published on

டமாஸ்கஸ்:

சிரியாவின் இத்லிப் நகரத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய கோர தாக்குதலில் 12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள இத்லிப் நகரில் நேற்று பயங்கர வெடிகுண்டுகளை உடலில் கட்டி வந்த தற்கொலைப்படை தீவிரவாதி, அந்நகரில் இருக்கும் ஆடை உற்பத்தி தொழிற்சாலை வளாகத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்தினான்.

இந்த கோர தாக்குதலில் 12 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை அரசுப்படைகளுக்கு எதிராக போரிட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் குழுவான ஹயாத் தாஹிர் நிகழ்த்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஹயாத் தாஹிர் குழுவானது முக்கிய தீவிரவாத இயக்கமான அல் கொய்தாவுடன் தொடர்பில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இத்லிப் நகரில் ஏற்கனவே ஐ.எஸ் தீவிரவாதிகளும் பல்வேறு தாக்குதலை இதற்கு முன்னதாக நிகழ்த்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com