ஈராக்: தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கு பகுதியில் இன்று தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாக்தாத்:

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கு பகுதியில் இன்று தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கே முசாயிப் என்ற பகுதியில் உள்ள பிரபல மார்க்கெட் பகுதியில் உடலில் வெடிகுண்டுகளை கட்டிவந்த தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சுமார் 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com