தமிழிசை சவுந்திரராஜன் பற்றி அவதூறு பேச்சு - திருச்சி பெண் மீது வழக்குப்பதிவு

தமிழிசை சவுந்தரராஜன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய திருச்சி பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தமிழிசை சவுந்திரராஜன் பற்றி அவதூறு பேச்சு - திருச்சி பெண் மீது வழக்குப்பதிவு
Published on

மணப்பாறை:

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பற்றி கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெண் ஒருவர் அவதூறாகவும் மிகவும் தரக்குறைவாகவும் பேசி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதையறிந்த பா.ஜ.க.வினர் அந்த பெண் யார் என்று விசாரித்த போது திருச்சி மாவட்டம் மணப்பாறை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, திருச்சி மாவட்ட பா.ஜ.க.நிர்வாகிகள், மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தமிழிசை சவுந்திரராஜன் பற்றி அவதூறாக பேசியது மணப்பாறை பகுதியை சேர்ந்த இளம்பெண் சூர்யா ஆரோ என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது 294 (ஆபாசமாக பேசுதல்) உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com