உத்தர பிரதேசம் ராஜ்யசபா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

உத்தர பிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் சுதான்ஷு திரிவேதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெற்றி பெற்ற சுதான்ஷு திரிவேதி
வெற்றி பெற்ற சுதான்ஷு திரிவேதி
Published on

லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி. இவர் ஆகஸ்டு மாதம் 24-ம் தேதி உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார்.

இதையடுத்து, உ.பி.யில் காலியாக உள்ள ராஜ்யசபா இடத்துக்கு அக்டோபர் 16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தள்ளது. இதில் பாஜக சார்பில் செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் சுதான்ஷு திரிவேதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் இருந்து இன்று பெற்றுக் கொண்டார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com