ராகுல் பற்றி விமர்சனம்: சுப்ரமணியசாமி உருவ பொம்மை எரிக்க முயற்சி - காங்கிரசார் 100 பேர் கைது

ராகுல் பற்றி விமர்சனம் செய்த சுப்ரமணியசாமியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
Published on

ராகுல்காந்தி போதை வஸ்து பயன்படுத்துவதாக சமீபத்தில் ஒரு வார பத்திரிகைக்கு சுப்ரமணியசாமி பேட்டி கொடுத்து இருந்தார். இது காங்கிரசார் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சுப்பிரமணியசாமியை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் இன்று போராட்டம் நடந்தது.

அதை எரிக்க முயன்ற போது போலீசார் பிடுங்கி சென்றனர். இதையடுத்து சுப்பிரமணியசாமியின் உருவப் படத்தை செருப்பால் அடித்து தங்கள் எதிர்ப்பை காட்டினர். அவரை கைது செய்ய வேண்டும். சுப்பிரமணியசாமி தமிழ் நாட்டிற்குள் எங்கு வந்தாலும் எதிர்த்து போராட்டம் நடத்து வோம் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கண்டித்து கோ‌ஷம் போட்டனர். பின்னர் தி.நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம், எஸ்.சி.துறை நிர்வாகிகள் செந்தமிழ் செல்வன், புத்தநேசன், கிஷோர்குமார், சாந்தி, அய்யப்பன், இமயம் கக்கன், மனோகர் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com