காயிதே மில்லத் 124வது பிறந்தநாள் - நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
காயிதே மில்லத் 124வது பிறந்தநாள் - நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
Published on

சென்னை:

காயிதே மில்லத்தின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய நேரத்தில், அரசியல் நிர்ணய சபையில், ஆட்சி மொழியில் ஒன்றாக தமிழை ஆக்கிட வேண்டும் என காயிதே மில்லத் குரல் கொடுத்துள்ளார். இன்று மும்மொழி பாடத்திட்டம் என்ற பெயரில், இந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை கட்டாயமாக்க வேண்டும் என இந்நாளில் உறுதியேற்கிறேன். தமிழர்களின் எதிர்ப்பால் மத்திய அரசு மும்மொழி கொள்கையை கைவிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com