

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருக்கோவிலூரில் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய செயலாளர் வக்கீல் தங்கம் தலைமையில் தி.மு.க. வினர் 5 முனை சந்திப்பில் இருந்து நகர தி.மு.க. செயலாளர் கோபி கிருஷ்ணன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம் சென்று அங்கு வெளியூர்களுக்கு புறப்பட்ட அரசு பஸ்களை வழிமறித்து மறியல் செய்தனர்.
இதனால் அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. வினர் 40 பேரையும் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முருகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் குணா, ஒன்றிய துணை செயலாளர் சங்கர், மாவட்ட தொண்டர் படை துணை அமைப்பாளர் வெங்கட், பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட பிரதிநிதி மலையரசன், முன்னாள் கவுன்சிலர்கள் தங்கராஜ், கோவிந்த், கலைவாணிசக்திவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஆதிநாராயண மூர்த்தி, தொ.மு.ச நிர்வாகி சரவணன், 9 வது வார்டு தி.மு.க. செயலாளர் துரை உள்ளிட்ட தி.மு.க. வினர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் தி.மு.க.வினர் 30 பேர் திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் கனகனந்தல் ரோடு சந்திப்பு அருகே திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. வினர் 30 பேரையும் கைது செய்தனர்.
அதேபோல் முகையூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் கண்டாச்சிபுரத்தில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்ட ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.