பள்ளி வாகனம் மோதி 10ம் வகுப்பு மாணவர் பலி

திருத்தணியில் தனியார் பள்ளி பேருந்து மோதியதில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் பலியானார்.
விபத்து
விபத்து
Published on

திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இன்று காலை தனியார் பள்ளி பேருந்து ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்தார். 

விசாரணையில் அந்த இளைஞர் பெயர் அசாருதீன் என்றும், 10ம் வகுப்பு படித்து வந்த அவர், டியூசன் சென்றுவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.  விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com