10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்களன்று வெளியீடு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் திங்களன்று வெளியிடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் திங்களன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

பள்ளி மாணவர்கள் அளித்த கைப்பேசி எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

மேலும் மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இந்தாண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

மதிப்பெண் சார்ந்த குறை இருப்பின் ஆக.17 முதல் 25-ந்தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆகஸ்ட் 17 முதல் 21-ந்தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com