இலங்கையில் கடைக்கு சென்று பெண்கள் மதுபானங்கள் வாங்க தடை

இலங்கையில் கடைகளுக்கு சென்று பெண்கள் மதுபானங்கள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் மைத்ரி பாலசிறிசேனா அறிவித்துள்ளார். #SriLanka
இலங்கையில் கடைக்கு சென்று பெண்கள் மதுபானங்கள் வாங்க தடை
Published on

இலங்கையில் சமீபத்தில் மதுபான சட்டம் புனரமைக்கப்பட்டது. அதன்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இரவு 10 மணிவரை மதுபானம் விற்கப்பட்டு வந்தது.

மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கடைக்கு சென்று மதுபானங்களை வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இது இலங்கையின் 60 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக நடந்த முக்கிய சம்பவமாக கருதப்படுகிறது.

இதற்கு புத்த மதத்தினரிடையேயும், பொதுமக்ள் மற்றும் எதிர்க்கட்சிகளிடம் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன. இதன் மூலம் இலங்கையில் வாழும் குடும்பத்தினரின் பெண்கள் மது பழக்கத்துக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்படும் என கூறினர்.


இந்த நிலையில் கொழும்பில் நடந்த ஒரு பேரணியை அதிபர் மைத்ரி பாலசிறிசேனா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது, அரசு சமீபத்தில் அறிவித்த மதுபான மறுசீரமைப்பு சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

மேலும் கடைகளுக்கு சென்று பெண்கள் மதுபானங்கள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com