காலே டெஸ்ட்: இரண்டாம் இன்னிங்சில் விராட் கோலி சதம் - இலங்கை அணிக்கு 550 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

காலே டெஸ்ட்டின் இரண்டாம் இன்னிங்சில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்துள்ளார். அத்துடன், இலங்கை வெற்றிபெற 550 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
காலே டெஸ்ட்: இரண்டாம் இன்னிங்சில் விராட் கோலி சதம் - இலங்கை அணிக்கு 550 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
Published on


காலே:

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் அதிகபட்சமாக 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 309 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முன்றாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்நிலையில், நான்காம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 240 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி 103 ரன்களுடனும், ரஹானே 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் இலங்கை அணி வெற்றிபெற 550 தேவை என்னும் இமாலய இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, இலங்கை அணி தனது இரண்டாம் இன்னிங்சை தொடங்கியுள்ளது. உபுல் தரங்கா 10 ரன்கள் எடுதத நிலையில் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கருணாரத்னேவுடன் குணதிலகா இணைந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com