

புதுடெல்லி:
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை மத்திய மந்திரி சஞ்சய் டோத்ரே கைகுலுக்கி வரவேற்றார். அவருடன் தூதரக அதிகாரிகளும் வந்திருந்தனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசும் ராஜபக்சே, இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்நிலையில், இந்தியா வந்தடைந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சந்தித்தனர்.