விராட் கோலி இல்லாத இந்தியாவை தோற்கடிக்க முடியும்: இலங்கை கேப்டன் நம்பிக்கை

விராட் கோலி இல்லாத இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியை எங்களால் தோற்கடிக்க முடியும் என இலங்கை கேப்டன் திசாரா பேரேரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Published on

இந்தியா - இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டி தரம்சாலாவில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வந்ததால், அவருக்கு இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் கேப்டனாக செயல்பட்ட உபுல் தரங்கா அதிரடியாக நீக்கப்பட்டு திசாரா பெரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி இல்லாத இந்திய அணியை எங்களால் தோற்கடிக்க முடியும் என திசாரா பெரேரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திசாரா பெரேரா கூறுகையில் ‘‘மேத்யூஸ் ஒருநாள் தொடரில் பந்து வீசுவார். அவர் டெஸ்ட் போட்டியில் பந்து வீசவில்லை. அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்காக தயாராகியுள்ளார். இது எங்களுக்கு சரியான பேலன்ஸ் அணியை தேர்வு செய்ய வாய்ப்பாக அமைந்துள்ளது. எங்கள் அணிக்கு சிறந்த பங்களிப்பை அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய அணியில் விராட் கோலி இல்லை. அவர் ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேன். ஆனால், நாங்கள் அதுகுறித்து யோசிக்கவில்லை. நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். ஆடுகளத்தை மதிப்பிட்டு, எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால், எங்களால் வெற்றி பெற முடியும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com