

ரோம்:
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், செர்பியாவின் டுஜான் லஜோவிக் உடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் கேமரூன் நூரியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.