இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 654 ரன்கள் குவித்து டிக்ளேர்

ஆஸ்திரேலியா தரப்பில் கவாஜா 232 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, வேண்டர்சே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 654 ரன்கள் குவித்து டிக்ளேர்
Published on

காலே:

இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கவாஜா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தினர். அவர் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசென் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து வந்த ஸ்மித், கவாஜாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து விளையாடிய இருவரும் சதமடித்தனர். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது . கவாஜா 147 ரன்களுடன், ஸ்மித் 104 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கவாஜா, ஸ்மித் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஸ்மித் 141 ரன்களில் ஆட்டமிழந்தார் . தொடர்ந்து விளையாடிய கவாஜா இரட்டை சதமடித்து அசத்தினார். இது அவரது முதல் இரட்டை சதம் ஆகும். அவர் 232 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவர் 94 பந்தில் 102 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனையடுத்து வந்த வெப்ஸ்டர் 23 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஆஸ்திரேலியா 654 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அலெக்ஸ் கேரி 46 ரன்களுடனும் மிட்செல் ஸ்டார்க் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, வேண்டர்சே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com