முக்கிய ஆலோசனை வழங்க கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி

கட்சிக்கு ஆலோசனை வழங்க தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
முக்கிய ஆலோசனை வழங்க கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி
Published on

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 1 வருடமாக உடல் நலக்குறைவு காரணமாக கோபாலபுரம் வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. கடந்த வாரம் முரசொலி அலுவலகத்துக்கு அவரை அழைத்து வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த முரசொலி கண்காட்சியை பார்வையிட வைத்தனர்.

கண்காட்சியை பார்வையிடுவதன் மூலம் அவருக்கு மீண்டும் பழைய நினைவுகள் திரும்பும் என்ற அடிப்படையில் அனைத்து அரங்குகளையும் சுற்றிக் காண்பித்தனர்.

அங்கிருந்த ஒவ்வொரு போட்டோக்களை பார்க்கும் போதும் அவருக்கு நினைவுகள் நன்றாக வரத் தொடங்கியது. இதை அவரது முக மலர்ச்சியை வைத்து கண்டுபிடிக்க முடிந்தது.

அங்கு கூடி நின்ற தொண்டர்களை பார்த்து அவர் கை அசைத்தபோது அனைவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கருணாநிதிக்கு பேச்சுப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது சளி தொந்தரவு வராமல் இருப்பதற்காக தொண்டையில் ‘டியூப்’ மாட்டப்பட்டுள்ளது. இதை அவ்வப்போது எடுத்து விட்டு பேச்சுப் பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.

இன்னும் ஓரிரு மாதங்களில் அவருக்கு மாட்டப்பட்டுள்ள ‘டியூப்’ முழுமையாக அகற்றப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு அவர் முழுமையாக பேசும் அளவுக்கு பயிற்சி கொடுக்கப்படும் என தெரிகிறது.

எனவே இன்னும் 3 மாதத்தில் எப்போதும் போல் பேசும் ஆற்றல் கருணாநிதிக்கு வந்து விடும் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி முழு அளவில் குணம் அடைந்ததும் கட்சிக்கு ஆலோசனை வழங்கி வழி நடத்தும் அளவுக்கு அவரது செயல்பாடு அமையும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com