இலங்கையின் அம்பாறை சம்மாந்துறை பகுதியில் வெடிகுண்டு மூலப்பொருள்கள் பறிமுதல் - 7 பேர் கைது

இலங்கையின் அம்பாறை சம்மாந்துறை பகுதியில் வெடிகுண்டு மூலப்பொருள்கள் பறிமுதல் - 7 பேர் கைது

இலங்கையில் அதிரடிப்படை நடத்திய தேடுதல் வேட்டையில் வெடிகுண்டு மூலப்பொருள்கள் வைத்திருந்த 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #SrilankaBlast
Published on

கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில் 300க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 

தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு

களுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு வாகன சோதனை, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இலங்கையின் கொழும்பு கடற்கரை முகத்துவாரம் பகுதியில் அதிரடிப்படை நேற்று நடத்திய சோதனையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 3 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், இலங்கையின் அம்பாறை சம்மாந்துறை பகுதியில் டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடிகுண்டு மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை பதுக்கி வைத்திருந்த 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டின் அருகில் தற்கொலைப்படை அங்கிகள் இரண்டையும் பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #SrilankaBlast

X

Maalai Malar
www.maalaimalar.com