மதுரை அருகே காவல் சார்பு ஆய்வாளர் பாண்டி கொரோனாவால் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காவல் சார்பு ஆய்வாளர் பாண்டி கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறப்பு காவல் ஆய்வாளர் பாண்டி
சிறப்பு காவல் ஆய்வாளர் பாண்டி
Published on

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களும் இந்த நோய் தொற்றால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த நிலையில், மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செக்கானூரணி சிறப்பு காவல் ஆய்வாளர் பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் கடந்த மாதம் ஜூன் 27 ஆம் தேதி கொரோனா உறுதி செயயப்பட்ட நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிறப்பு காவல் ஆய்வாளர் பாண்டி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சககாவலர் உயிரிழந்த சம்பவம்  மதுரை போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com