சட்டசபை எத்தனை நாட்கள் நடக்கும்?- சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு ஆலோசனை

சட்டசபை நடத்துவது தொடர்பாக சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
சபாநாயகர் தனபால்
சபாநாயகர் தனபால்
Published on

சென்னை:

கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு இம்மாதம் 14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.14-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சட்டசபையை எத்தனை நாட்களுக்கு நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்வதற்காக சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

சபாநாயகர் ப.தனபால் தலைமையிலான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com