சவுகார்பேட்டையில் வடநாட்டு கொள்ளையர்கள் கைது

சவுகார்பேட்டையில் பகலில் கட்டிட வேலை, இரவில் திருட்டில் ஈடுபட்ட வடநாட்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
சவுகார்பேட்டையில் வடநாட்டு கொள்ளையர்கள் கைது
Published on

ராயபுரம்:

யானைக்கவுனி போலீசார் இன்று அதிகாலை 4 மணியளவில் சவுகார் பேட்டை பொன்னப்ப செட்டி தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் சுற்றித்திரிந்தனர்.

அவர்களிடம் சோதனை நடத்திய போது சுத்தியல், கடப்பாறை, ஸ்குரூ டிரைவர் போன்றவை இருந்தது. எனவே போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் அனைவரும் வட நாட்டு கொள்ளையர்கள் என தெரிய வந்தது. அவர்களது பெயர் ரமேஷ், தர்மேந்தர், விக்ரம்சிங், ஹீராராம். இவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பகலில் இவர்கள் கட்டிட வேலை செய்வார்கள். மாலையில் பூட்டிக்கிடக்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளை நோட்டமிடுவார்கள். அதிகாலை 2 முதல் 4 மணி அளவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com