சவுகார்பேட்டையில் காரில் இருந்த 2 கிலோ தங்கம் பறிமுதல் - வாலிபரிடம் விசாரணை

சவுகார்பேட்டையில் காரில் இருந்த 2 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சவுகார்பேட்டையில் காரில் இருந்த 2 கிலோ தங்கம் பறிமுதல் - வாலிபரிடம் விசாரணை
Published on

ராயபுரம்:

சவுகார்பேட்டை, என். எஸ்.சி.போஸ் சாலையில் நேற்று இரவு யானைகவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரத்தில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த காரில் சோதனை செய்தனர். அதில் இருந்த பார்சலை பிரித்து பார்த்த போது தங்க கட்டி இருந்தது.

இதையடுத்து காரில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் தங்க கட்டிக்கான எந்த ஆவணமும் இல்லை. 2 கிலோ தங்க கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை வருமானவரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக காரில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடந்து வருகிறது. தங்க கட்டி கடத்தப்பட்டதா? யாருக்கு கொடுக்க எடுத்து வரப்பட்டது? என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com