அடுத்த ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு இந்திய வீரர் தான் பொருத்தமானவர் - கிரேம் சுமித்

ஐ.சி.சி.யின் அடுத்த தலைவர் பதவிக்கு இந்திய வீரர் தான் பொருத்தமானவராக இருப்பார் என தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரேம் சுமித் தெரிவித்துள்ளார்.
கிரேம் சுமித்
கிரேம் சுமித்
Published on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக இந்தியாவின் ஷசாங் மனோகர் இருக்கிறார். அவரது பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. இந்த நிலையில் ஐ.சி.சி.யின் அடுத்த தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி பொருத்தமானவராக இருப்பார், அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரரும், தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனருமான கிரேம் சுமித் விருப்பம் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com