விநாயகர் சதுர்த்தி பண்டிகை - சோனியா, ராகுல் காந்தி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி
சோனியா காந்தி, ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி:

விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சோனியா காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாட்டு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com