இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் - காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
சோனியா காந்தி
சோனியா காந்தி
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பதவியேற்று கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி ஒரு வருடம் நிறைவடைந்தது.

மக்களவை தேர்தலில் கிடைத்த தோல்வியைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ராஜினாமா செய்த ராகுல் காந்தி மீண்டும் கட்சித் தலைவராக வரவேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரசின் சில தலைவர்கள்  தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டம் மாலை 6 மணியளவில் முடிந்தது.

கட்சி மற்றும் தலைமையை பலவீனமாக்க யாருக்கும் உரிமை இல்லை.  கட்சியின் உள் விவகாரங்கள் ஊடகங்கள் மூலமாக வெளியில் தெரிவிக்க முடியாது. கொரோனா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தியே தொடர்வார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com