பீகார் : பளிங்கு கற்களை ஏற்றி வந்த லாரி தலைக்குப்புற கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் பலி

பீகாரில் பளிங்கு கற்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து ஏற்பட்ட பகுதி
விபத்து ஏற்பட்ட பகுதி
Published on

பாட்னா:

பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சரேய நரேந்திர கிராமத்தின் சாலை அருகே சிறுவர் சிறுமியர் இன்று மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தனர். அனைத்து குழந்தைகளும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். 

அப்போது அந்த சாலை வழியாக பளிங்கு கற்களை ஏற்றி  வந்த லாரி  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் விழுந்து, தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

லாரியின் ஓட்டுநர் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com