சிறுமுகை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சிறுமுகை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

கோவை:

கோவை மாவட்டம் சிறுமுகை பாலதோட்டத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது40). இவர் அந்த பகுதியில் உள்ள கைத்தறி குடோனில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று குடோனில் உள்ள டியூப் லைட் எரியாமல் இருந்தது. இதனையடுத்து அதனை வேல்முருகன் மாற்றினார். அப்போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் சம்பவஇடத்திலேயே வேல்முருகன் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com