சிங்கையில் லாரியில் மணல் கடத்திய 3 பேர் கைது

சிங்கையில் லாரியில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கையில் லாரியில் மணல் கடத்திய 3 பேர் கைது
Published on

நெல்லை:

சிங்கை அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது ஒரு லாரியில் அனுமதி இல்லாமல் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியில் வந்த அம்பை மகேந்திரன், சிங்கை பாண்டியன் ராஜா (45), அகஸ்தியர்புரம் கண்ணன் (38) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com