ராகுல்காந்திக்கு பொய்களின் இளவரசர் பட்டம் தரலாம்- உபி மந்திரி கிண்டல்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி தவறான தகவல் கூறி வரும் ராகுல்காந்திக்கு பொய்களின் இளவரசர் என்ற பட்டம் கொடுக்கலாம் என உபி மந்திரி கிண்டல் செய்துள்ளார். #Congress #RahulGandhi #SiddharthNathSingh
ராகுல்காந்திக்கு பொய்களின் இளவரசர் பட்டம் தரலாம்- உபி மந்திரி கிண்டல்
Published on

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ரபேல் போர் விமான ஒபந்தம் தொடர்பாக பிரதமர் மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவந்தார். பல தடவை மறுப்பு தெரிவித்த பின்பும் தொடர்ந்து முறைகேடு நடந்து இருப்பதாக பிரசாரம் செய்து வருகிறார்.

அவருக்கு உத்தரபிரதேச மாநில மந்திரி சித்தார்த் நாத் சிங் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களிடம் பொய்களை கூறி அவர்களை தவறாக வழிநடத்துகிறார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட ரபேல் ஒப்பந்தம் பற்றியும், இப்போதைய ஒப்பந்தம் பற்றியும் அவருக்கு தெரியுமா?

அவர் பொய்சொல்லி விட்டு அதற்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்கிறார். ராகுல்காந்திக்கு பொய்களின் இளவரசர் பட்டம் கொடுக்கலாம். 2019 பாராளுமன்ற தேர்தலில் ரபேல் ஒப்பந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ராகுல்காந்தி சொல்கிறார். பொய்களை வைத்துக்கொண்டு மோத முடியாது என்பதை கூறிக்கொள்கிறேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com