27 ஓவர்கள் தாக்குப்பிடித்து ஷுப்மான் கில்- ரோகித் சர்மா ஜோடி சாதனை

வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் கடைசி 10 ஆண்டுகளில் நீண்ட நேரம் களத்தில் நின்ற தொடக்க ஜோடி என்ற பெருமையை ஷுப்மான் கில்- ரோகித் சர்மா பெற்றுள்ளனர்.
ஷுப்மான்  கில், ரோகித் சர்மா
ஷுப்மான் கில், ரோகித் சர்மா
Published on

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 338 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது.

ஷுப்மான் கில், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோரின் பந்து வீச்சை திறமையாக இந்த ஜோடி எதிர்கொண்டது.

27 ஓவர்கள் வரை இந்த ஜோடி களத்தில் நின்றது. 27-வது ஓவரின் கடைசி பந்தில் ரோகித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

27 ஓவர்கள் களத்தில் நின்றதன் மூலம் இந்திய டெஸ்ட் அணி வெளிநாட்டில் விளையாடும்போது, 2010-ம் ஆண்டுக்குப்பின் அதிக நேரம் தாக்குப்பிடித்த ஜோடி என்ற பெருமையை ஷுப்மான் கில்- ரோகித் சர்மா பெற்றுள்ளனர்.

மேலும் 14 இன்னிங்சில் முதல் அரைசதம் அடித்த ஜோடியும் இதுவாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com