புதுடெல்லி:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு அமைப்புகள் இந்த தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றன.
இதற்கிடையே விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர், இந்த ஆண்டு முதல் பாபர் மசூதி இடிப்பு தினத்தை வெற்றி தினமாக கொண்டாடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற சிவசேனா கட்சி பேரணியில், 2018-ம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என தெரிவித்துள்ளனர்.
டெல்லியின் படேல் சவுக் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் இன்று நடைபெற்ற சிவசேனா கட்சியினரின் பேரணியில் பேசிய மாநில தலைவர் நீரஜ் சேத்தி, 2018-ம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியே தீருவோம். அப்படி கட்ட முடியவில்லை என்றால் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஆவேசமாக கூறினார்.