பாதுகாப்பு துறையில் சரியாக செயல்படவில்லை: மனோகர் பாரிக்கர் மீது சிவசேனா குற்றச்சாட்டு

பாதுகாப்புத் துறையில் மந்திரியாக இருந்தபோது மனோகர் பாரிக்கர் சரியாக செயல்படவில்லை என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.
பாதுகாப்பு துறையில் சரியாக செயல்படவில்லை: மனோகர் பாரிக்கர் மீது சிவசேனா குற்றச்சாட்டு
Published on

கோவாவின் பனாஜி தொகுதிக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பா.ஜ.க. சார்பில் கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் போட்டியிடுகிறார்.
 
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவியது. அதில், கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் பேசுகிறார். பனாஜி இடைத்தேர்தலில் தான் தோல்வி அடைந்தால், மீண்டும் மத்திய அமைச்சராக பொறுப்பேற்க போகிறேன் என கூறுவதுபோல் அதில் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், இந்த வீடியோ குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், “பனாஜியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் மக்கள் தன்னை வெற்றிபெறச் செய்ய மாட்டார்கள் என்பதை அவர் உணர்ந்துள்ளார். இதுதான் ஜனநாயகம்.

மக்கள் உங்களை ஏற்கவில்லை என்றால், நீங்கள் வீட்டில் போய் உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் தோற்றால் மத்திய மந்திரியாகி விடுவேன் என்கிறீர்கள். பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்தபோது நீங்கள் சரியாக செயல்படவில்லை. நாட்டின் பாதுகாப்பு துறை என்பது உங்களுக்கு விளையாட்டாக போய்விட்டதா?’’ என கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com