ரஜினியின் அரசியல் பிரவேசத்தை காண நாடே ஆவலுடன் காத்து இருக்கிறது: சத்ருகன் சின்கா சொல்கிறார்

இந்தி திரைப்பட நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்கா நாட்டு மக்களின் எதிர்கால வாழ்வை சிறப்பாக வடிவமைக்க ரஜினி அரசியலில் இணைவதற்கு இதுவே சரியான தருணம் என தெரிவித்து உள்ளார்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்தை காண நாடே ஆவலுடன் காத்து இருக்கிறது: சத்ருகன் சின்கா சொல்கிறார்
Published on

புதுடெல்லி:

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தொடர்ச்சியாக 5 நாட்கள் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வின் இறுதிநாள் அன்று அவர் ரசிகர்கள் மத்தியில் பேசுகையில், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை சூசகமாக தெரிவித்தார். ரஜினியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது.

இந்த நிலையில், இந்தி திரைப்பட நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்கா நாட்டு மக்களின் எதிர்கால வாழ்வை சிறப்பாக வடிவமைக்க ரஜினி அரசியலில் இணைவதற்கு இதுவே சரியான தருணம் என தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து சத்ருகன் சின்கா தனது டுவிட்டர் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் டைட்டானிக் கதாநாயகனே, இந்தியாவின் மகனே, அன்புள்ள ரஜினிகாந்த், நீங்கள் அரசியலில் குதிப்பதற்கு இதுவே சரியான மற்றும் உச்சக்கட்ட தருணம். உங்களது ஆக்கப்பூர்வமான அரசியல் பிரவேசத்தை காண நாடே ஆவலுடன் காத்திருக்கிறது. உங்களுடைய மக்கள் மற்றும் நாட்டு மக்களின் எதிர்கால வாழ்க்கையை வடிவமைக்க அரசியலுக்கு வாருங்கள். ஒரு நல்ல நண்பனாக, நலம் விரும்பியாக உங்களது ஆதரவாளராக, வழிகாட்டியாக எப்பொழுதும் நான் உங்களுடன் இருப்பேன். இப்பொழுதும் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com