

காவிரியில் கழிவுநீரை கலப்பது தொடர்பாக கர்நாடக மாநில அரசு மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், கர்நாடகாவில் இருந்து வரும் காவிரியில் கழிவுநீர் கலப்பதாகவும், மாசு கலந்த நீரை தமிழகத்திற்கு வழங்குவதாகவும் கூறப்பட்டிருந்தது. இது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்தது.