ஈராக்கில் துப்பாக்கி சூடு: வெளிநாட்டு துணை தூதர் உள்பட 3 பேர் பலி

ஈராக் நாட்டின் ஓட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் துருக்கிக்கான துணை தூதர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துப்பாக்கி சூடு நடந்த ஓட்டல்.
துப்பாக்கி சூடு நடந்த ஓட்டல்.
Published on

பாக்தாத்:

ஈராக் நாட்டின் எர்பில் நகரில் நட்சத்திர ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு இன்று ஈராக் நாட்டுக்கான துருக்கி துணை தூதர் மற்றும் சக ஊழியர்கள் சென்றிருந்தனர்.

இந்நிலையில், அந்த ஓட்டலுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு துணை தூதர் மற்றும் அவருடன் வந்த சக ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தூதரக அதிகாரிகள் அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் துணை தூதர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பிச்சென்ற மர்ம நபரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.    

X

Maalai Malar
www.maalaimalar.com