

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது, சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சியை பறி கொடுக்கிறது. மத்தியப்பிரதேசத்திலும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் இதர கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சிக்கான மக்களின் நற்சான்றிதழாக இந்த முடிவுகள் கருதப்படுகிறது. இந்நிலையில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக கருதப்படும் இந்த தேர்தலில் பா.ஜ.க. காணாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், ‘மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது மக்களின் தீர்ப்பு மட்டுமல்ல, இந்த நாட்டு மக்களின் வெற்றியும்கூட.
விவசாயிகள், ஏழை மக்கள், இளைஞர்கள், தலித்துகள், சிறுபான்மையின மக்களுக்கான வெற்றியாக இதை பார்க்க வேண்டும். இந்த அரையிறுதி போட்டியில் எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க. காணாமல் போய்விட்டது.