செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

திருவள்ளூர:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கம் 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இந்த ஏரியில் தற்போது 468 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழை காரணமாக 800 கன அடி நீர் வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு3645 மில்லியன் கன அடி. ஏரியில் இன்றைய நிலவரப்படி 1037 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. 1763 கன அடி நீர் வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 73 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. இன்று ஏரியின் நீர்மட்டம் 988 கன அடியாக உயர்ந்துள்ளது. 1311 கன அடி நீர் வருகிறது. சென்னைக்கு 84 கன அடி வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி. இன்றைய நிலவரப்படி 354 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையால் 613 கன அடி நீர் வருகிறது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி கூறியதாவது:-

மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கையும் தயார் நிலையில் உள்ளன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொது மக்களை மீட்க குழுவினர் தயாராக உள்ளனர். பொது மக்களை தங்க வைப்பதற்காக 178 தாற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் 15 முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 1,436 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் 787 ஏரிகளும் , 14 ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் 649 ஏரிகளும் உள்ளன. இவை தவிர 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குளம், குட்டைகள் உள்ளன.

தொடர் மழையால் இதுவரை 121 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பியுள்ளன. 237 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com