தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை- பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையில் இருந்து 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்
Published on

சென்னை:

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளத்துறை தகவல் அளித்துள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் காவல் ஆணையாளர்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான படகுகளை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதன்படி சென்னை,  மதுரை, கோவை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள் விமான நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன.

இதேபோல் கடலோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்களோ, படகுகளோ தென்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com