தென்காசியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், நகல் எரிப்பு போராட்டம்

தென்காசியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், நகல் எரிப்பு போராட்டம் நடத்தினர்.
நகல் எரிப்பு போராட்டம்
நகல் எரிப்பு போராட்டம்
Published on

தென்காசி:

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை கண்டித்து அதன் நகல்களை கிழித்து எறியும் போராட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது அவர்களை தென்காசி போலீசார் கைது செய்தனர். 

இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஷேக் சிந்தா மதார் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர்கள் சீனா சேனா சர்தார், இம்ரான் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஷேக்முகமது ஒலி, யாசர்கான், கல்வத் கனி, நகர தலைவர் செய்யது மஹ்மூத், நகர செயலாளர் பாதுஷா உட்பட 53 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com