தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறப்பு

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் நாளை வழக்கம் போல் திறக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறப்பு
Published on

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் ஜூன் 7-ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் படி நாளை (7-ந் தேதி) தமிழகம் முழுவதும் பள்ளிகள் திட்டமிட்ட படி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் கூறுகையில், சென்னையில் உள்ள பள்ளிக்கூடங்கள் கோடை விடுமுறைக்குப் பிறகு நாளை திட்டமிட்டபடி திறக்கப்படும் என்றார்.

இதே போல் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்கள் நாளை பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com