நிர்பயா வழக்கு - பவன் குப்தாவின் மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் மார்ச் 2ல் விசாரணை

நிர்பயா வழக்கு குற்றவாளியான பவன் குமாரின் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் மார்ச் 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

புதுடெல்லி:

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 குற்றவாளிகளையும் மார்ச் 3-ம் தேதி தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது.

குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து நிராகரித்தது.

இதற்கிடையே, நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குமார் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளியான பவன் குமாரின் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் மார்ச் 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com